இடுகைகள்

ஜனவரி, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

படம்
ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் என அழைக்கப்படும் இடம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர் . ராமேஸ்வரம் பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார் வரை கடலுக்கு அடியில் 50 கி.மீட்டர் தூரத்திற்கு ஒரு மணல் திட்டு அமைந்துள்ளது. இது ராமாயண காலத்தில் எழுப்பப்பட்டது என ஆன்மிகவாதிகள் கூறி வருகின்றனர். ஆனால், அது வெறும் கட்டுக்கதை, இயற்கையாக கடலுக்கு அடியில் உருவான மணல் திட்டுகள்தான் அவை என சிலர் கூறி வருகின்றனர். இந்நிலையில், அந்த இடம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த சில விஞ்ஞானிகள்தான் இப்படி கருத்து தெரிவித்துள்ளனர். அந்த இடத்தில் அமைந்துள்ள மணல் திட்டுகள் வேண்டுமானால் இயற்கையாக உருவானவையாக இருக்கலாம். ஆனால், அங்குள்ள சுண்ணாம்புக்கல் பாறைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். அவை 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த கருத்தை ஆன்மீகவாதிகள் வரவேற்றுள்ளனர்....

பிஸ்த்தா பருப்பு

படம்
 பிஸ்த்தா பருப்பு உட்கொண்டால் கிடைக்கும் 6 நன்மைகள் பிஸ்த்தா பருப்பு விலை அதிகமாக இருப்பதால் தான் பெரும்பாலும் மற்ற பருப்புகளை நாட வேண்டி இருக்கிறது. பிஸ்த்தா சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பல உள்ளன. 1. இதய ஆரோக்கியம் : பிஸ்த்தா பருப்பு கெட்ட கொலஸ்ட்ராலை (LDL ) குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை ( HDL ) அதிகரிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் தான் இதய நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. மேலும் பிஸ்த்தா இதயத்திற்க்கு செல்லும் நாளங்களை வலிமை படுத்துகிறது. 2. நீரிழிவு நோய் : ஒரு கப் பிஸ்த்தா பருப்பில் தினமும் உடலுக்கு தேவையான பாஸ்பரஸில் 60 % கிடைக்கிறது. பாஸ்பரஸ் டைப் 2 நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது. பிஸ்த்தா பருப்பில் உள்ள பாஸ்பரஸ் புரதங்களை அமினோ அமிலமாக மாற்ற உதவுகிறது. அமினோ அமிலம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும். 3. இரத்தம் : வைட்டமின் பி6 இரத்ததில் ஆக்ஸிஜன் எடுத்துச் செல்ல உதவுகிறது. வைட்டமின் பி6 நிறைந்த பிஸ்த்தா பருப்பை அதிக அளவு உட்கொண்டால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும். 4. நரம்பு மண்டலம் : பிஸ்த்தா பருப்பில் உள்ள அமினோ அமிலம் நரம்பு மண்டலத்தில...

உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் ஏற்படும் மோசமான விளைவுகள்

படம்
உருளைக்கிழங்கு உலகெங்கும் பயன்படுத்தப்படுகிறது மற்றும் அனைவரும் விரும்பும் காய்கறிகளில் ஒன்றாகும். இதன் சுவை காரணமாக அனைவரும் அடிமை ஆகிவிட்டோம், ஆனால் ஒவ்வொரு நாணயமும் இரண்டு பக்கங்கள் கொண்டுள்ளது போல் உருளைக்கிழங்கு பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும். 1. எடையை அதிகரிப்பு : உருளைக்கிழங்கில் அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளது, ஒரு வரம்புக்கு மேல் உருளைக்கிழங்கு சாப்பிடுவதால் எடை அதிகரிக்கும் மற்றும் உடல் பருமனை அதிகரிக்கும். 2. செரிமானத்தை பாதிக்கிறது : உருளைக்கிழங்கு அதிகமாக சாப்பிடுவதால் நமது செரிமான அமைப்புகளில் பல சிக்கல்களை ஏற்படுத்தலாம். வயிற்றுப்போக்கு பிரச்சினைகளுக்கு உருளை கிழங்கு வழிவகுக்கும். 3. பதற்றத்தை ஏற்படுத்தும் : உருளைக்கிழங்கு உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும், ஆனால் நீங்கள் ஏற்கனவே உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த மருந்துகள் எடுத்துக்கொண்டால், உருளைக்கிழங்கு உயர் இரத்த அழுத்தத்தை மிக மோசமான நிலை வரை குறைக்கும், எனவே மருந்துகள் எடுத்துக்கொண்டால் தயவுசெய்து அதிக அளவு உருளைக்கிழங்கு சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. உருளைக்கிழங்கில் பொட்டாசியம் நிறைந்து கா...

உடலுக்கு ஆரோக்கியம் தரும் 5 பருப்புகள்

படம்
பருப்பு வகைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளாக திகழ்கிறது. பொதுவான நன்மைகள் : மூளை செயல் திறன் அதிகரிக்கிறது ஆரோக்கியமான இதயத்திற்க்கு உதவுகிறது வலிமையான எலும்புகளுக்கு உதவுகிறது நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பல்வேறு வகையான பருப்பு வகைகள் இவ்வுலகில் நிறைந்துள்ளது. இந்தியாவில் காணப்படும் சில பருப்புகளின் நன்மைகள். முக்கியமான 5 பருப்புகள் : 1. பாதாம் பருப்பு : மூளை செயல்திறனை மேம்படுத்த பாதாம் பருப்பு உதவுகிறது. பாதாம் பருப்பு டொபமைன் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எப்படி சாப்பிடுவது சிறந்தது : ஒரு இரவு முழுவதும் பாதாம் பருப்பை ஊரவைத்து காலையில் சாப்பிட வேண்டும். 2. நிலக்கடலை : நிலக்கடலை வறுத்து மற்றும் வேக வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மையை விட பச்ச நிலக்கடலையில் அதிக நன்மைகள் கிடைக்கிறது. இளமையான சருமத்தை பெற நிலக்கடலை சாப்பிடலாம். மன அழுத்தம் உள்ள நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் மேங்கனீஸ் உள்ளதால் நினைவு திறனை மேம்படுத்துகிறது. 3. முந்திரி பருப்பு : முந்திரி உலகில் அனைத்து மூலையிலும் கா...

உடலின் அனைத்து வியாதிகளையும் சரி செய்ய

படம்
உடலின் அனைத்து வியாதிகளையும் சரி செய்ய: நிச்சயம் இதை ட்ரை பண்ணுங்க! நம் உடலில் உள்ள அனைத்து வியாதிகளையும் சரிசெய்ய நாம் கடைப்பிடிக்க வேண்டிய எளிய வழிகள் சில உள்ளன. அவற்றை பின்பற்றினாலே எந்த வியாதிகளும் நம்மை அணுகாமல் பார்த்துக்கொள்ளலாம். 1. இனிப்பை முதலில் உட்கொள்ள வேண்டும் (செரிமான சுரப்பிகள் இயங்க தொடங்கும்). 2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்து உட்கொள்ள வேண்டும். 3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு முறையும் ஆறு சுவைகளையும் உட்கொள்வது மிகவும் சிறந்தது - முழு நெல்லிக்காய் மிக சிறந்த அறுசுவை கனி. 4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து உதட்டை மூடி உட்கொள்ள வேண்டும். நொறுங்கத் தின்றால் 120 வயது வரை வாழலாம். வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக்கூடியது உமிழ்நீர் கலந்த உணவு. உமிழ்நீர் கலந்த உணவை மட்டும்தான் நமது உடல் மருந்தாக மாற்றும். 5. உண்ணும்போது உதட்டை மூடி வாயில் காற்று புகாமல் மென்று உண்ண வேண்டும். வாயைத் திறந்து சாப்பிடுவது உமிழ்நீர் சுரப்பதை தடுத்து செரிமானத்தைப் பாதிக்கும். 6. உணவு உட்கொள்ளும்போது உணவில் ம...

உலர்ந்த திராட்சை பழத்தின் மகிமைகள்

படம்
உலர்ந்த திராட்சை பழத்தில் இவ்வளவு மகிமைகள் இருக்கு? நல்லா சாப்பிட்டு உடல் உறுதியை பெறலாம்... ** உலர்ந்த திராட்சைப் பழத்தில் சுண்ணாம்புச் சத்து அதிகம் உள்ளது. ஓர் உலர்ந்த திராட்சைப் பழம் 30 மிலி கிராம் சுண்ணாம்புச் சத்து கொண்டது. இதை குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், அவர்கள் நல்ல உடல் பலத்துடன் வேகமாக வளர்ந்து வருவார்கள். ** எலும்புகளோடு, பற்களும் உறுதியாக அமையும். ஆகையால் வளரும் குழந்தைகளுக்கு இரவு உணவுக்குப் பின் தினசரி 15 முதல் 20 வரை திராட்சை பழத்தைக் கொடுத்து வருவது நல்லது. ** வாலிப வயது தாண்டி வயோதிக வயதிற்கு வரும் பொழுது தினசரி உலர்ந்த திராட்சைப் பழத்தை இரவு ஆகாரத்துக்குப் பின் சாப்பிட்டு வந்தால் சுறுசுறுப்பு ஏற்படும். எலும்புகள் உறுதியாக இருக்கும், பற்கள் கெட்டிப்படும்; பல் சம்பந்தமான எந்தக் கோளாறும் ஏற்படாது. இதயம் பலத்துடனிருக்கும். இதயத்துடிப்பு இயற்கை அளவிலேயே இருக்கும். ** குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பெண்கள் இரவு சாப்பாட்டிற்குப் பிறகு கைப்பிடியளவு உலர்ந்த திராட்சைப் பழத்தைச் சாப்பிட்டு வந்தால் சத்தான பால் உற்பத்தியாகும். வளரும் குழந்தைகளின் எலும்புகள் பலப்பட்...

பேரீச்சம்பழத்தின் பயன்கள்

படம்
பேரீச்சம்பழத்தில் அடங்கியுள்ள எண்ணற்ற மருத்துவ குணங்கள் உங்கல் உடலுக்கு நன்மை அளிக்கிறது. உடல் எடையை அதிகரிக்க தினமும் பேரீச்சம்பழம் சாப்பிடலாம். இதில் இருக்கும் வைட்டமின், புரதம் போன்றவை உடல் எடையை அதிகரிக்க உதவுகின்றன. தினமும் ஒரு பேரீச்சம்பழம் சாப்பிட்டு வந்தால் இதயம் வலுப்பெறும். தினமும் இரண்டு பேரீச்சம்பழத்துடன் ஒரு தம்ளர் பால் பருகி வந்தால் ரத்தம் விருத்தியடையும். தசை வளர்ச்சியை அதிகரித்து, உடல் வலிமையைப் பெருக்கும் இந்தப் பழம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனை வரும் கண்டிப்பாக சாப்பிட வேண்டிய பழமாகும். தினமும் பேரிச்சம்பழம் சாப்பிட்டு வருவதால் செரிமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வு காண இயலும். இதில் நார்ச்சத்து அதிகம் இருக்கிறது, இது செரிமான பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்க உதவுகிறது. மற்றும் குடலியக்கத்தையும் சீர் செய்கிறது. பேரிச்சம் பழத்தில் இருக்கும் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள உதவுகின்றன. பேரிச்சம் பழத்தில் இருக்கும் மினரல்கள் எலும்பின் வலிமையை அதிகரிக்கிறது. எலும்பு தேய்மானம் மற்றும் எலும்பு சார்ந்த பி...

எலுமிச்சம் பழம்

படம்
சர்வரோக நிவாரணியான எலுமிச்சம் பழத்தில் பொதிந்து கிடக்கும் மருத்துவ குணங்கள்... எலுமிச்சம் பழத்தை சமையலில் சுவைக்காக சேர்த்துக் கொண்டாலும் அதில் நிறைய மருத்துவ குணங்கள் பொதிந்து கிடக்கின்றன. இதனை ஒரு சர்வரோக நிவாரணி என்று சொல்லலாம். அந்தளவுக்கு நோய்கள் வராமல் தடுத்து உடல் நலத்தை காத்துக் கொள்ள என்னென்ன பொருட்கள் அவசியம் தேவையோ, அவைகள் அனைத்தும் இந்த பழத்தில் இருக்கின்றன. ** ரத்தக் கொதிப்பைத் தடுப்பதில் எலுமிச்சம் பழம் மிக முக்கிய பங்காற்றுகிறது. மேலும் கெட்ட ரத்தத்தை தூய்மைப்படுத்துவதற்கு எலுமிச்சம் பழத்தை விட மேலான ஒன்று கிடையாது. ** முக்கிய வைட்டமின் சத்தான வைட்டமின் சி, எலுமிச்சம் பழத்தில் நிறைய இருக்கிறது. எலுமிச்சையில் இருக்கும் சிட்ரிக் அமிலம் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. அதனால் தொற்று நோய் கிருமிகளின் தாக்குதலில் இருந்து உடலை கண்போல பாதுகாக்கிறது. ** எலுமிச்சம் பழரசத்தை சாப்பிட்டால் மண்ணீரல் வீக்கம் பிரச்சினையில் இருந்து விடுபடலாம். எலுமிச்சம் பழத்தின் சாற்றை தேனில் கலந்து சாப்பிடுவது ஒரு சத்து மிக்கடானிக் ஆகும். உடலுக்கு வேண்டிய உயிரூட்டத்தையும், ஒளியையும் எலுமிச்சம...

பீன்ஸ்

படம்
பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 அற்புதமான நன்மைகள் பீன்ஸில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. தினமும் நம் உடலுக்கு தேவையான புரதங்கள் பீன்ஸில் இருந்து கிடைக்கிறது மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. பீன்ஸில் உள்ள சத்துக்கள் : வைட்டமின் ஏ வைட்டமின் சி வைட்டமின் கே வைட்டமின் பி6 ஃபோலிக் அமிலம் கால்சியம் இரும்பு சத்து மேங்கனீஸ் சிலிகான் பொட்டாசியம் மற்றும் காப்பர். 1. உடலுக்கு சக்தி கொடுக்கிறது : கீரையை விட பீன்ஸில் இரண்டு மடங்கு இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. இரும்பு சத்து இரத்ததில் ஆக்ஸிஜனை கடத்த உதவுகிறது. ஆக்ஸிஜன் உடலை சுறுசுறுப்பாக இருக்க வைக்கிறது. 2. இதய ஆரோக்கியம் : பச்சை காய்கறியான பீன்ஸில் கால்சியம் மற்றும் ஃப்லேவனாய்டுகள் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. 3. கண் பார்வை : பீன்ஸில் உள்ள கரோட்டின் கண்களின் செல்கள் சிதையாமல் காக்கிறது. செல்கள் பாதிக்காமல் இருக்க பீன்ஸ் சாப்பிடுங்கள். பீன்ஸில் உள்ள ல்யூட்டீன் கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து கண்களை பாதுகாக்கிறது. 4. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது :...

அஜினமோட்டோ

படம்
அஜினமோட்டோ பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள் வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கம் இப்போது குறைந்துகொண்டே வருகிறது. கூடவே கொடிய நோய்களும் வருகிறது. அஜினமோட்டோ சேர்க்காத உணவுகளே உடல் நலத்திற்கு ஏற்றது. ஆனால் அஜினமோட்டோ இல்லாத உணவுகளை தான் நாம் சாப்பிடுகிறோமா என்றால் கேள்வி குறி தான். பாக்கெட் செய்யப்பட்ட அனைத்து உணவுகளிலும் அஜினமோட்டோ சேர்க்கபடுவதாக உணவு தர ஆய்வு கூறுகிறது. குறைவான பணத்தை கொண்டு அதிக சுவை கொடுக்க தயாரிக்கப்பட்ட ஒன்று தான் அஜினமோட்டோ. ஜப்பானியர் ஒருவரால் 1909 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது. அஜினமோட்டோ பயன்படுத்துவதால் விளையும் நோய்கள் : தலைவலி : அஜினமோட்டோ பயன்படுத்துவதால் உடனடியாக தலைவலி ஏற்படுவதில்லை, ஆனால் தலைவலி படிப்படியாக வளர்ந்து தாங்கமுடியாத ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும். தலைவலி நீடித்தால் கண் பார்வை கோளாறு மற்றும் மன நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. நரம்பு கோளாறு : அஜினமோட்டோ தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலை மரத்துப் போக செய்கிறது. அஜினமோட்டோ நரம்புகளில் வீக்கம் ஏற்படுத்தும் காரணியாகவும் உள்ளது. நரம்பியல் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பைய...
படம்
தினமும் 5 நிமிடம் இதைச் செய்தால் போதும்; இதய நோய் முதல் கால் வீக்கம் வரை அனைத்தும் சரியாகும்! நமது உடலை எந்த ஒரு நோய் தாக்கமும் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்திருக்கவே அனைவரும் விரும்புகிறோம். அதற்காக நாம் எவ்வளவோ மெனக்கெடவும் செய்கிறோம். உதாரணத்திற்குக் காலையில் எழுந்ததும் உடற் பயிற்சி, யோகா செய்வது, சுடு தண்ணீர், பழச் சாறுகள் குடிப்பது என ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பல முயற்சிகளை எடுக்கிறோம். தினமும் வெறும் 5 நிமிடம் இதைச் செய்து பாருங்கள் இதய பிரச்னை முதல் கால் வீக்கம் வரை சீராகும். காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுவருக்கு அருகில் ஒரு துணியை விரித்து சுவரை பார்த்தாற் போல் எதிர்த் திசையில் படுங்கள். பின் கால்களை நேராக உயர்த்தி சுவரின் மேற்பரப்பில் சமமாக வையுங்கள். அதாவது உங்களது உடல் பார்ப்பதற்கு ‘L' வடிவில் சரியாக 90 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும். இந்த நிலையில் சுமார் ஒரு 5 நிமிடங்கள் நீடிக்க வேண்டும். இந்தக் கால வேலையில் கண்களை மூடி மூச்சை நன்கு உள்ளிழுத்து பொறுமையாக வெளியிட வேண்டும். தலை முதல் கால் வரை ரத்த ஓட்டம் சமமாக பாய்வதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும். பயன்கள்: இதயத்...

தேங்காய் தண்ணீர்

படம்
ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்தால் என்னவாகும் தெரியுமா? நோயெதிர்ப்பு மண்டலம் வலிமை பெறும் தேங்காய் தண்ணீரைக் குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.  தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்  சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய் தண்ணீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம். மேலும் தேங்காய் தண்ணீர் உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.  செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீரை தொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம். ஏனெனில் தேங்காய் தண்ணீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்...

பழங்களில் உள்ள சத்துக்கள்

படம்
நடுத்தர அளவு கொண்ட பழங்களில் உள்ள வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் எவ்வளவு ? 1. ஆப்பிள் : ஒரு நடுத்தர ஆப்பிளில் 0.47 கிராம் புரதங்கள், 9.5 கலோரிகள் மற்றும் 4.4 கிராம் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. தாது சத்துக்கள் : துத்தநாகம் ( Zinc ) = 0.07 மில்லி கிராம் காப்பர் = 0.049 மில்லி கிராம் இரும்பு சத்து = 0.22 மில்லி கிராம் மேங்கனீஸ் = 0.064 மில்லி கிராம் மெக்னீசியம் = 9 மில்லி கிராம் பாஸ்பரஸ் = 20 மில்லி கிராம் கால்சியம் = 11 மில்லி கிராம்                                                 பொட்டாசியம் = 195 மில்லி கிராம். வைட்டமின்கள் : வைட்டமின் ஏ = 98 IU ( international units ) வைட்டமின் பி1 = 0.031 மில்லி கிராம் வைட்டமின் பி2 = 0.047 மில்லி கிராம் நியாசின் = 0.166 மில்லி கிராம் வைட்டமின் பி6 = 0.075 மில்லி கிராம் வைட்டமின் சி = 8.4 மில்லி கிராம் வைட்டமின் ஈ = 0.33 மில்லி கிராம் வைட்டமின் கே = 4 மில்லி கிராம் 2. வாழைப்பழம் : ஒரு நடுத்தர வா...

கருவில் இருக்கும் குழந்தைகளின் வளர்ச்சி

படம்
கருவில் இருக்கும் குழந்தைகளின் வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வோம் கண்கள் மற்றும் காதுகள் வளர்ச்சி :  எட்டு மாதங்களில் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு கண்கள் மற்றும் காதுகள் உருவாகும். பிறப்புறுப்பு : ஒரு குழந்தைக்கு பிறப்புறுப்பு எப்போது உருவாகும் என்று தெரியுமா ?  கர்ப்பமான ஒன்பதாவது வாரத்தில் உங்கள் குழந்தைக்கு பிறப்புறுப்பு வளரும். இது பிறக்க போவது ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை தீர்மானிக்கும். கேட்கும் திறன் : கர்ப்பமான 24ம் வாரத்தில் உங்கள் குழந்தை கருப்பைக்கு வெளியே இருந்து வரும் குரல்களை ( சத்தத்தை ) கேட்க ஆரம்பிக்கிறது. அதே சமயம் காலால் எட்டி உதைத்து பதிலளிக்க ஆரம்பிக்கிறது. குழந்தையின் முகம் இந்த நேரத்தில் முற்றிலும் வளச்சி அடைந்து இருக்கலாம். சுவாசித்தல் : நுரையீரல்களால் வெளியில் இருந்து நேரடியாக ஆக்ஸிஜன் எடுத்துக் கொள்ள முடியாது, ஆகையால் தாயிடம் இருந்து ஆக்ஸிஜன் பெற்று சுவாசிக்க ஆரம்பிக்கிறது. கர்ப்பமான 27ம் வாரம் குழந்தையின் நுரையீரல்கள் காற்றில் சுவாசிக்க ஆரம்பிக்கிறது. வாசனை/நாற்றம் : கர்ப்பமான 28 வது வாரத்திற்குப் பிறக...