உடலுக்கு ஆரோக்கியம் தரும் 5 பருப்புகள்

பருப்பு வகைகள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளாக திகழ்கிறது.
பொதுவான நன்மைகள் :

மூளை செயல் திறன் அதிகரிக்கிறது
ஆரோக்கியமான இதயத்திற்க்கு உதவுகிறது
வலிமையான எலும்புகளுக்கு உதவுகிறது
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
பல்வேறு வகையான பருப்பு வகைகள் இவ்வுலகில் நிறைந்துள்ளது. இந்தியாவில் காணப்படும் சில பருப்புகளின் நன்மைகள்.

முக்கியமான 5 பருப்புகள் :

1. பாதாம் பருப்பு :
மூளை செயல்திறனை மேம்படுத்த பாதாம் பருப்பு உதவுகிறது. பாதாம் பருப்பு டொபமைன் ஹார்மோனை உற்பத்தி செய்கிறது. இது மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

எப்படி சாப்பிடுவது சிறந்தது :

ஒரு இரவு முழுவதும் பாதாம் பருப்பை ஊரவைத்து காலையில் சாப்பிட வேண்டும்.

2. நிலக்கடலை :

நிலக்கடலை வறுத்து மற்றும் வேக வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மையை விட பச்ச நிலக்கடலையில் அதிக நன்மைகள் கிடைக்கிறது.

இளமையான சருமத்தை பெற நிலக்கடலை சாப்பிடலாம். மன அழுத்தம் உள்ள நோயாளிகள் நிலக்கடலை சாப்பிடலாம். நிலக்கடலையில் மேங்கனீஸ் உள்ளதால் நினைவு திறனை மேம்படுத்துகிறது.

3. முந்திரி பருப்பு :
முந்திரி உலகில் அனைத்து மூலையிலும் காணப்படும் பருப்பு வகை. மற்ற பருப்புகளை விட முந்திரி அனைவருக்கும் விருப்பமான ஒன்று.

கொழுப்பு அதிக அளவு இருக்கிறது என்று நினைத்து பலர் முந்திரி பருப்பை தவிர்க்கின்றனர். ஆனால் இதில் உள்ள கொழுப்பு இதய ஆரோக்கியத்திற்கு நல்லது.

முந்திரி பருப்பில் உள்ள கொழுப்பு மிகவும் நல்லது. எனவே இனி பயமில்லாமல் சாப்பிடலாம். அளவுக்கு மீறிய உணவு எப்போதும் ஆபத்து தான்.

4. பிஸ்த்தா பருப்பு :
இந்த பச்சை நிற பிஸ்த்தா அற்புதமான நன்மைகளை கொண்டுள்ளது. பிஸ்த்தா பருப்பில் கொலஸ்ட்ரால் இல்லை மற்றும் இரத்ததில் சர்க்கரை அளவை குறைக்கிறது.

5. வால்நட்ஸ் :
வால்நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலம் இருப்பதால் இதய கோளாறுகளை தடுக்கிறது.

இப்போது இந்தியாவில் பல்வேறு கடைகளில் வால்நட்ஸ் கிடைக்கிறது. இணையத்தில் கூட பதிவு செய்து வாங்கிக்கொள்ளலாம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

TRIGONOMETRIC RATIOS OF COMPOUND ANGLES

Set theory symbols

FORMULAS FOR SHAPES