அஜினமோட்டோ
அஜினமோட்டோ பயன்படுத்துவதால் ஏற்படும் பக்க விளைவுகள்
வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கம் இப்போது குறைந்துகொண்டே வருகிறது. கூடவே கொடிய நோய்களும் வருகிறது.
அஜினமோட்டோ சேர்க்காத உணவுகளே உடல் நலத்திற்கு ஏற்றது. ஆனால் அஜினமோட்டோ இல்லாத உணவுகளை தான் நாம் சாப்பிடுகிறோமா என்றால் கேள்வி குறி தான்.
பாக்கெட் செய்யப்பட்ட அனைத்து உணவுகளிலும் அஜினமோட்டோ சேர்க்கபடுவதாக உணவு தர ஆய்வு கூறுகிறது.
குறைவான பணத்தை கொண்டு அதிக சுவை கொடுக்க தயாரிக்கப்பட்ட ஒன்று தான் அஜினமோட்டோ. ஜப்பானியர் ஒருவரால் 1909 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
அஜினமோட்டோ பயன்படுத்துவதால் விளையும் நோய்கள் :
தலைவலி :
அஜினமோட்டோ பயன்படுத்துவதால் உடனடியாக தலைவலி ஏற்படுவதில்லை, ஆனால் தலைவலி படிப்படியாக வளர்ந்து தாங்கமுடியாத ஒற்றை தலைவலியை ஏற்படுத்தும். தலைவலி நீடித்தால் கண் பார்வை கோளாறு மற்றும் மன நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு.
நரம்பு கோளாறு :
அஜினமோட்டோ தொடர்ந்து பயன்படுத்துவதால் உடலை மரத்துப் போக செய்கிறது. அஜினமோட்டோ நரம்புகளில் வீக்கம் ஏற்படுத்தும் காரணியாகவும் உள்ளது. நரம்பியல் கோளாறுகள் வருவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்துகிறது.
இதய கோளாறுகள் :
அஜினமோட்டோ உட்கொண்டால் இதய துடிப்பு அதிகரிக்கும், மார்பகத்தில் வலி மற்றும் மாரடைப்பு ஏற்பட காரணமாக அமைகிறது.
தாய் மற்றும் சேய் :
கர்ப்பிணி பெண்கள் அஜினமோட்டோ பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கடைகளில் விற்க்கப்படும் 80% பொருட்கள் அஜினமோட்டோ சேர்க்கப்பட்டவை. இதனால் ஏற்படும் விளைவுகளை பட்டியலிட முடியுமா என்றால் நிச்சயமாக முடியாது.
மேலும் சில அஜினமோட்டோ விளைவுகள் :
- இரத்த அழுத்தம்
- வயிறு கோளாறு
- தைராய்டு
- உடல் பருமன்
- நீரிழிவு நோய்
- ஆஸ்துமா
- ஹார்மோன்கள் சமநிலையின்மை
- ஒவ்வாமை
- கண் பார்வை கோளாறு.
சுவைக்கு நம் நாக்கு அடிமை. ஆனால் நாம் அஜினமோட்டோவிற்க்கு அடிமையாக கூடாது.
அஜினமோட்டோ எப்போதாவது பயன்படுத்துவதால் பிரச்சனை வருவது குறைவு. இருந்தாலும் தவிர்ப்பது நல்லது.
கருத்துகள்