பீன்ஸ்

பீன்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 அற்புதமான நன்மைகள்

பீன்ஸில் கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக உள்ளது. தினமும் நம் உடலுக்கு தேவையான புரதங்கள் பீன்ஸில் இருந்து கிடைக்கிறது மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
பீன்ஸில் உள்ள சத்துக்கள் :

  • வைட்டமின் ஏ
  • வைட்டமின் சி
  • வைட்டமின் கே
  • வைட்டமின் பி6
  • ஃபோலிக் அமிலம்
  • கால்சியம்
  • இரும்பு சத்து
  • மேங்கனீஸ்
  • சிலிகான்
  • பொட்டாசியம் மற்றும்
  • காப்பர்.

1. உடலுக்கு சக்தி கொடுக்கிறது :


கீரையை விட பீன்ஸில் இரண்டு மடங்கு இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. இரும்பு சத்து இரத்ததில் ஆக்ஸிஜனை கடத்த உதவுகிறது. ஆக்ஸிஜன் உடலை சுறுசுறுப்பாக இருக்க வைக்கிறது.

2. இதய ஆரோக்கியம் :


பச்சை காய்கறியான பீன்ஸில் கால்சியம் மற்றும் ஃப்லேவனாய்டுகள் நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

3. கண் பார்வை :


பீன்ஸில் உள்ள கரோட்டின் கண்களின் செல்கள் சிதையாமல் காக்கிறது. செல்கள் பாதிக்காமல் இருக்க பீன்ஸ் சாப்பிடுங்கள். பீன்ஸில் உள்ள ல்யூட்டீன் கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைத்து கண்களை பாதுகாக்கிறது.

4. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது :

பீன்ஸில் லெக்யும்ஸ் இருப்பதால் நீரிழிவு நோயை குறைப்பதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரத்ததில் சர்க்கரை சமநிலையில் இருந்தால் நீரிழிவு நோய் வருவதில்லை. பீன்ஸ் இரத்ததில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது.

5. எலும்பு வலிமை :


பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் பீன்ஸில் உள்ளது. எலும்பு தேய்மானம் ஏற்படாமல் தடுக்க பீன்ஸ் பரிந்துரைக்க படுகிறது.

வைட்டமின் ஏ, கே, மற்றும் சிலிகான் குறைபாட்டினால் எலும்பு வலுவிழக்கிறது. எனவே இவை அனைத்தும் நிறைந்த பீன்ஸ் உட்கொள்வதால் எலும்பு வலிமை பெறுகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழநி மலை முருகன்

சங்குப் பூ

Types of triangle