ராமர் பாலம் கட்டுக்கதை அல்ல - அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு


ராமேஸ்வரம் கடல் பகுதியில் ராமர் பாலம் என அழைக்கப்படும் இடம் மனிதர்களால் உருவாக்கப்பட்டது என அமெரிக்க விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ராமேஸ்வரம் பாம்பனில் இருந்து இலங்கையில் உள்ள தலைமன்னார் வரை கடலுக்கு அடியில் 50 கி.மீட்டர் தூரத்திற்கு ஒரு மணல் திட்டு அமைந்துள்ளது. இது ராமாயண காலத்தில் எழுப்பப்பட்டது என ஆன்மிகவாதிகள் கூறி வருகின்றனர். ஆனால், அது வெறும் கட்டுக்கதை, இயற்கையாக கடலுக்கு அடியில் உருவான மணல் திட்டுகள்தான் அவை என சிலர் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், அந்த இடம் மனிதர்களால் உருவாக்கப்பட்டதுதான் என அமெரிக்க விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அமெரிக்காவில் இந்தியானா பல்கலைக்கழகம், தெற்கு ஓரிகன் பல்கலைக்கழகம், கொலராடோ பல்கலைக்கழகம் ஆகியவற்றை சேர்ந்த சில விஞ்ஞானிகள்தான் இப்படி கருத்து தெரிவித்துள்ளனர்.
அந்த இடத்தில் அமைந்துள்ள மணல் திட்டுகள் வேண்டுமானால் இயற்கையாக உருவானவையாக இருக்கலாம். ஆனால், அங்குள்ள சுண்ணாம்புக்கல் பாறைகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டவைதான். அவை 7 ஆயிரம் ஆண்டுகள் பழமையானவை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த கருத்தை ஆன்மீகவாதிகள் வரவேற்றுள்ளனர். ஆனால், பகுத்தறிவுவாதிகள் மறுத்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேல

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

FORMULAS FOR SHAPES

BODMAS RULE

Set theory symbols