பிஸ்த்தா பருப்பு

 பிஸ்த்தா பருப்பு உட்கொண்டால் கிடைக்கும் 6 நன்மைகள்

பிஸ்த்தா பருப்பு விலை அதிகமாக இருப்பதால் தான் பெரும்பாலும் மற்ற பருப்புகளை நாட வேண்டி இருக்கிறது. பிஸ்த்தா சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள் பல உள்ளன.



1. இதய ஆரோக்கியம் :

பிஸ்த்தா பருப்பு கெட்ட கொலஸ்ட்ராலை (LDL ) குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை ( HDL ) அதிகரிக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் தான் இதய நோய்களுக்கு காரணமாக இருக்கிறது. மேலும் பிஸ்த்தா இதயத்திற்க்கு செல்லும் நாளங்களை வலிமை படுத்துகிறது.

2. நீரிழிவு நோய் :

ஒரு கப் பிஸ்த்தா பருப்பில் தினமும் உடலுக்கு தேவையான பாஸ்பரஸில் 60 % கிடைக்கிறது. பாஸ்பரஸ் டைப் 2 நீரிழிவு நோய் வராமல் தடுக்கிறது. பிஸ்த்தா பருப்பில் உள்ள பாஸ்பரஸ் புரதங்களை அமினோ அமிலமாக மாற்ற உதவுகிறது. அமினோ அமிலம் நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த மருந்தாகும்.

3. இரத்தம் :

வைட்டமின் பி6 இரத்ததில் ஆக்ஸிஜன் எடுத்துச் செல்ல உதவுகிறது. வைட்டமின் பி6 நிறைந்த பிஸ்த்தா பருப்பை அதிக அளவு உட்கொண்டால் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

4. நரம்பு மண்டலம் :

பிஸ்த்தா பருப்பில் உள்ள அமினோ அமிலம் நரம்பு மண்டலத்தில் சிக்னல்களை கடத்த உதவுகிறது.

5. நோயெதிர்ப்பு சக்தி :

உடல் முழுவதும் பாயும் இரத்ததில் சிவப்பு அணுக்கள் அதிகரிக்க வைட்டமின் பி6 உதவுகிறது மற்றும் ஹீமோகுளோபின் எண்ணிக்கை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

6. ஆரோக்கியமான சுரப்பி :

உடலில் பல்வேறு விதமான சுரப்பிகள் உள்ளன. மண்ணீரல் மற்றும் தைமஸ் போன்ற சுரப்பிகள் நன்றாக செயல்பட வெள்ளை அணுக்கள் கொண்ட இரத்தம் உதவுகிறது.

மேலும் சில நன்மைகள் :

  • புற்றுநோய் வராமல் தடுக்கிறது
  • வயது முதிர்ச்சியை குறைக்கிறது
  • உடல் தோல் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது
  • பார்வை திறனை மேம்படுத்துகிறது
  • முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது
  • சுறுசுறுப்பான மூளைக்கு உதவுகிறது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழநி மலை முருகன்

Types of triangle

சங்குப் பூ