தினமும் 5 நிமிடம் இதைச் செய்தால் போதும்; இதய நோய் முதல் கால் வீக்கம் வரை அனைத்தும் சரியாகும்!


நமது உடலை எந்த ஒரு நோய் தாக்கமும் இல்லாமல் ஆரோக்கியமாக வைத்திருக்கவே அனைவரும் விரும்புகிறோம். அதற்காக நாம் எவ்வளவோ மெனக்கெடவும் செய்கிறோம். உதாரணத்திற்குக் காலையில் எழுந்ததும் உடற் பயிற்சி, யோகா செய்வது, சுடு தண்ணீர், பழச் சாறுகள் குடிப்பது என ஆரோக்கியத்தைப் பாதுகாக்க பல முயற்சிகளை எடுக்கிறோம். தினமும் வெறும் 5 நிமிடம் இதைச் செய்து பாருங்கள் இதய பிரச்னை முதல் கால் வீக்கம் வரை சீராகும்.
காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் சுவருக்கு அருகில் ஒரு துணியை விரித்து சுவரை பார்த்தாற் போல் எதிர்த் திசையில் படுங்கள். பின் கால்களை நேராக உயர்த்தி சுவரின் மேற்பரப்பில் சமமாக வையுங்கள். அதாவது உங்களது உடல் பார்ப்பதற்கு ‘L' வடிவில் சரியாக 90 டிகிரி கோணத்தில் இருக்க வேண்டும்.
இந்த நிலையில் சுமார் ஒரு 5 நிமிடங்கள் நீடிக்க வேண்டும். இந்தக் கால வேலையில் கண்களை மூடி மூச்சை நன்கு உள்ளிழுத்து பொறுமையாக வெளியிட வேண்டும். தலை முதல் கால் வரை ரத்த ஓட்டம் சமமாக பாய்வதை ஆழ்ந்து கவனிக்க வேண்டும்.

பயன்கள்:
இதயத் துடிப்பை சீர்ப் படுத்தி எந்தக் கோளாறும் இல்லாமல் இதயத்தைச் செயல்பட வைக்கும்.
கால்களை உயர்த்துவதன் மூலம் வயிற்றுப் பகுதியில் ஏற்படும் அழுத்தம் குடல்களில் ஏதேனும் அடைப்பு இருந்தால் அதைச் சரி செய்து அதன் செயல்பாட்டை சரி செய்யும்.
கால்களில் ஏதேனும் வீக்கம் இருந்தால் ரத்தம் சீராக பாய்வதன் மூலம் அந்த வீக்கம் குறையும்.
இதனால் ரத்தம் உடல் முழுவதும் சீராக பாய்வதால் ரத்த அழுத்த பிரச்னையில் இருந்தும் விடுபடலாம்.
சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும் என்பது பழமொழி. அதற்கேற்ப தினமும் ஒரு 5 நிமிடத்தை உங்களது உடலிற்காக ஒதுக்கி தொடர்ச்சியாக இதைச் செய்து பயன் பெருங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழநி மலை முருகன்

சங்குப் பூ

Types of triangle