இடுகைகள்

செப்டம்பர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பழநி மலை முருகன்

படம்
பழநி மலை முருகன் ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலையின் ரகசியங்கள் : 1. தண்டாயுதபாணி விக்ரகத்திற்கு நான்கு விதமான அபிஷேக பொருட்கள் மட்டும் தான் உபயோகிக்கபடுகிறது. அவை, நல்லெண்ணெய், பஞ்சாமிர்தம், சந்தனம், விபூதி என்பவை. பன்னீர் மார்கழி மாதத்தில் மட்டும் உபயோகபடுத்தபடுகிறது. இவையில் சந்தனம், பன்னீர் தவிர மற்றவை எல்லாம் தண்டாயுதபாணியின் சிரசில் வைத்து, உடனே அகற்றபடுகிறது. முடி முதல், அடி வரை அபிஷேகம் என்கிற முழு அபிஷேகம் சந்தனத்துக்கும், பன்னீரும் மட்டும் தான். இதில் சிரசுவிபூதி என்பது சித்தர் உத்தரவால் பக்தர்களுக்கு வழங்க படுகிற ஒரு பிரசாதம். கிடைப்பது மிக புண்ணியம். 2.ஒரு நாளைக்கு ஆறு முறை தண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் செய்யபடுகிறது. 3.இது ஐந்து முதல் ஏழு நிமிடத்துக்குள் முடிந்துவிடும். 4.அபிஷேகம் முடிந்து அலங்காரம் செய்துவிட்டால், பின்னர் அடுத்த அபிஷேகம் வரை மாலை சாற்றுவதோ, பூக்களால் அர்ச்சனை செய்வதோ கிடையாது. 5.இரவில் முருகனின் மார்பில் மட்டும் வட்ட வடிவில் சந்தன காப்பு சார்த்தபடுகிறது. விக்ரகத்தின் புருவங்களுக்கிடையில் ஒரு பொட்டு அளவுக்கு சந்தானம் வைக்க படும். முன் காலத்...

அருகம்புல்

படம்
இயற்கை மருத்துவத்தில் அருகம்புல்லின் பயன்களை   தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும். தினமும் அருகம்புல் குடிப்பது நல்லது என்கிறது இயற்கை மருத்துவம். @  கணு நீக்கிய அருகம்புல் 30 கிராம் வென்ணெய் போல் அரைத்துச் சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாட்கள் வரை  சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும். @  சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி  தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம். @  ஞாபக சக்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல்  அதிகரிக்கும். @  அருகம்புல்லையும், தேங்காய் எண்ணையைய...
படம்
நம் முன்னோர்கள் முட்டாள்கள் அல்ல விவசாய விஞ்ஞானிகள்.... ஒரு விவசாயி இடத்தை வாங்கும் முன், முதல் நாள் இரவு ஒரு சேவலோடு போய் தங்குவார்.. விடியற்காலையில் சேவல் வழக்கம்போல் கூவினால் மண்ணில் ‘உசுரு’ இருக்குண்ணு அர்த்தம். கூவாவிட்டால் மண்ணில் சத்து இல்லைன்னு அர்த்தம்... சேவல் நன்றாக கூவினால் மட்டுமே அந்த இடத்தை வாங்குவர்..இதிலுள்ள முக்கியமான உண்மை என்னவென்றால் சேவல் மண்ணைக்கீர அதனுள் உள்ள புழுக்களை தின்று மறுநாள் தெம்பாகக்கூவும். தோண்டி புழு கிடைக்கவில்லை என்றால் அந்த கூவலின் ஆற்றலில் தெரிந்துவிடும். புழு அதிகம் இருக்கும் மண் விவசாயத்திற்கு ஏற்றது. ஒரு விவசாய கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திற்க்குள் மேய விடவேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம் . அப்படி அவை படுக்கும் இடங்களை 4, 5 நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத் தில் தொடர்ந்து படுக்குமாம். அந்த இடத் தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்...

காலை உணவு...மிகவும் அவசியம்!

படம்
காலை உணவு...மிகவும் அவசியம்! காலை உணவு அன்றைய தினத்தின் மிக முக்கியமான உணவு. மற்ற உணவு வேளைகளைக் காட்டிலும் உடல் ஆரோக்கியத்தைத் தருவதிலும் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதி அவசரங்களில் மூழ்கி பரபரப்பாகக் கிளம்பி ஓடுவது இன்றைக்கு சகஜமாகி விட்டது. கடிகாரம் விரட்டும் இந்த விளையாட்டில் காலை உணவு என்பதைப் பலரும் மறந்து விடுகிறார்கள். ஆனால், காலை உணவு கட்டாயம் என்று மருத்துவம் கடுமையாக எச்சரிக்கிறது. இரவு உணவுக்கும், காலை உணவுக்கும் இடையே நீண்ட இடைவெளி இருப்பதால்தான் காலை உணவை பிரேக் ஃபாஸ்ட் அதாவது விரதத்தை உடைப்பது என்றே பெயரிட்டுச் சொல்கிறோம். காலை உணவு சாப்பிடுபவர்கள் மட்டுமே நாள் முழுதும் வேகமாக செயல்படுவதோடு மனஅழுத்தம் இன்றி மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கிறது. காலை உணவு சிறப்பான உணவாக இருப்பது நல்லது. வளரும் குழந்தைகள் உள்ள வீட்டில் தினையரிசிப் பொங்கல் செய்வது நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு, வரகரிசி உப்புமா சிறந்த மினி டிபன். இவையெல்லாம் சாதாரணமாக பொங்கல், உப்புமா செய்யத் தெரிந்தவர்கள் எளிதாகச் செய்யக்கூடிய சிற்றுண்டிகள். அரிச...

இஞ்சிப்பால்

படம்
நோய்களை துரத்தி அடிக்கும் இஞ்சிப்பால் செய்வது எப்படி.? யாரெல்லாம் சாப்பிடலாம்.? ஆள்காட்டி விரல் பருமனில் சிறிது துண்டு இஞ்சியை எடுத்து தோலைச் சீவிக்கணும். தோல் சீவிய இஞ்சித்துண்டை நல்லா நசுக்கிட்டு, பிறகு முக்கால் குவளை தண்ணீர் எடுத்து அதில் நசுக்கிய இஞ்சியை போட்டு நல்லா கொதிக்க விடணும். தண்ணீரில் சாரம் முழுவதும் இறங்கி விடும். பிறகு வடிகட்டி சாரை எடுத்துக் கொள்ளணும். அப்புறம் அரைக் குவளை காய்ச்சிய பால் எடுத்துக்கொண்டு அத்துடன் வடிக்கட்டிய சாரத்தை கலந்து கொள்ளணும். அத்துடன் தேவையான அளவில் தேன் அல்லது பனங்கற்கண்டு அல்லது சர்க்கரை இனிப்புச் சுவைக்காக சேர்த்துக்கணும். அவ்வளவுதான். இஞ்சிப்பால் தயார். இந்த இஞ்சிப் பாலை காலையில வெறும் வயிற்றில் குடிக்கனும். இப்படி தினம் செஞ்சா என்ன கிடைக்கும்? 1. நுரையீரல் சுத்தமாகும். 2. சளியை ஒழுச்சு கட்டிடும். 3. வாயுத் தொல்லை என்பதே வராது. 4. தேவையில்லாத கொழுப்பு பொருளை கரைச்சிடும். 5. தொப்பை வயிற்றுக்காரர்கள் தொப்பைக்கு விடை கொடுத்துவிடலாம். 6. அதிகமா எடை இருந்தா படிப்படியாக குறைஞ்சிடும். 7. ஒல்லியா ஆகணும்னு நினைக்கிறவங்க தொடர்ந்த...

சோற்றுக் கற்றாழை

படம்
அற்புத மூலிகை சோற்றுக் கற்றாழை..! ஆலுவேரா                   சோற்றுக் கற்றாழை என்றழைக்கப்படும் குமரி ஒரு மகா மூலிகை ஆகும். எந்த வைத்திய முறையிலும் கையாளப்படும் அற்புத மூலிகை. இந்த சோற்றுக் கற்றாழை அயல்நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு பொடியாக மாற்றப்பட்டு மீண்டும் நம் நாட்டிற்கே இறக்குமதி செய்யப்பட்டு அல்சருக்கான அல்லோபதி மாத்திரைகளிலும், சித்த, ஆயுர்வேத, யூனானி மருந்துகளுக்கும் உபயோகிக்கப்படுகின்றன.                    சோற்றுக் கற்றாழை முடி உதிர்வதைத் தடுப்பதோடு, சிறுநீரகம் மற்றும் மண்ணீரல் , கல்லீரல் ஆகியவற்றில் உள்ள விஷங்களை நீக்குகிறது. எயிட்ஸ் ஐயும் குணமாக்கும் வல்லமை உள்ளது. கேன்சர் என்னும் புற்று நோயை குணப்படுத்தும் வல்லமை வாய்ந்தது.                    நறுங் கற்றாழைக்கு வாத மேகம் , கப கோபம் , கிருமிக் குத்தல் (மூலக் குத்தல் ), பெரு வியாதி ( குஷ்டம் , பால்வினை நோய்கள் ) , மூலம் , உன்மத்தம் , பகந்தரம் , வயிற்று நோய் , தினவுள்ள ...

முளைக்கட்டிய வெந்தயம்

படம்
முளைக்கட்டிய வெந்தயம்: சிறிது நேரம் ஊறவைத்து, ஈரப்பருத்தித் துணியில் முளைக்கட்டி சாப்பிடலாம். பலன்கள் : கடுமையான சர்க்கரை நோயாளிகள் தினமும் கட்டாயம் ஒரு கப் எடுத்துக்கொள்வதன் மூலம் சர்க்கரையின் அளவு கட்டுப்படும். வயிற்றுப்புண், பெண்கள் கர்ப்பப்பை நோய்கள், வெள்ளைப்படுதல் மற்றும் எப்படிப்பட்ட அல்சரையும் குணப்படுத்தும். ஒரு கப் அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம்.

முடக்கற்றான் கீரை

படம்
முடக்கற்றான் கீரை:                  பொதுவாக வயது ஆக ஆக மூட்டுவலி பெரும்பாலானவர்களுக்கு வந்து விடுகிறது. அதற்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. ஆனால் எல்லா வயதினருக்குமே மூட்டுக்களில் ஏற்படும் உபாதைகள் இயல்பான ஒன்றாகிவிட்டன. இதற்குக் காரணம் மூட்டுகளில் தங்கிய யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள்தான். இவைகளைத் கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு. கீல்பிடிப்பு, கிரந்தி, கரப்பான், பாதத்தைப் பிடித்த வாதம், மலக்கட்டு அத்தனையும் முடக்கற்றான் உபயோகித்தால் இந்த உலகை விட்டே ஓடிவிடுமாம்.                   முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், குறிப்பா கிராமங்களில் எல்லோர் வீட்டுக் கொல்லைப்புறத்திலும் இது படர்ந்து கிடக்கும். இதை தொடர்ந்து உண்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது.                   குறைந்தது ம...

சங்குப் பூ

படம்
  சங்குப் பூ உணவிலும் மாற்றம்!!! உடலிலும் மாற்றம்!!!! சங்குப் பூ: சங்குப்பூ வேரை (50 கிராம்) நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி மூன்று தேக்கரண்டி வீதம் 2 மணிநேரத்திற்கு ஒரு முறை 6 முறைகள் ஒரே நாளில் சாப்பிட்டு வந்தால் எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும். சங்குப்பூ வேர், கீழா நெல்லி முழுத் தாவரம், யானை நெருஞ்சில் இலை, அருகம்புல், இவை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடியுடன் மிளகு (5) சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு தயிரில் கலக்கி காலை வேளை 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்வெள்ளை படுதல், சிறுநீர் எரிச்சல் குணமாகும். சங்குப்பூக்களை பறித்து தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் ரத்தக்குழாயில் உள்ள அடைப்புநீங்கும். சங்குப்பூக்களை நீரில் கொதிக்க வைத்து, அந்த கொதிநீரால் பொறுக்கும் சூட்டில் புண்களைக் கழுவி வந்தால் பால்வினை நோய், வெள்ளை படுதல் உள்ளவர்களுக்கு யோனியில் ஏற்படும் துர்நாற்றமும் ஆகியவை கட்டுப்படும். சங்குப் பூ செடியின் காய்களுக்குள் இருக்கும் முற்றிய விதைகளை எடுத்து வறுத்து பொடியாக்கி அரை ஸ்பூன் அளவுக்குஎடுக்கவும...

டெங்கு காய்ச்சலுக்கு வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்

படம்
* டெங்குவை விரட்டும் மருந்து வீட்டிலேயே தயாரிக்கலாம் !* நில வேம்பு டெங்கு காய்ச்சல் பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. மருத்துவமனைக்கு சென்றால், பெரும் செலவை இழுத்து விடக்கூடியதாக, டெங்கு காய்ச்சல் மாறி விட்டது. அப்படியே போனாலும், உடனடியாக நிவாரணம் கிடைக்குமா, காய்ச்சலும், அதனால் ஏற்படும் அசதியும் உடனே சரியாகுமா என்பதெல்லாம் சந்தேகமே. ஆனால், வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய எளிய மருந்தான நில வேம்பு கஷாயத்தின் மூலம், டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க முடியும். நிலவேம்பு பொடி என்பது பலரும் நினைப்பது போல, ஒரே ஒரு மூலிகைச்செடியில் இருந்து தயார் செய்யப்படுவது அல்ல; அது, நில வேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற் படாகம், சுக்கு, மிளகு, கோரைக்கிழங்கு ஆகியவை சேர்த்து தயார் செய்யப்பட்டது. சாதாரணமாக, அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும். நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை: 5 கிராம் முதல் 10 கிராம் அளவு நிலவேம்பு பொடியை 200 மி.லி., தண்ணீரில் போட்டு 50 மி.லி., அளவுக்கு சுண்டும் வரை கொதிக்க வைக்...

ஆசிய தடகள ராணி

படம்
ஆசிய தடகள ராணி: பி. டி. உஷா, கேரளாவை சேர்ந்த ஒரு புகழ்பெற்ற இந்திய தடகள வீராங்கனை ஆவார். 1985 மற்றும் 1986 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகத் தடகள விளையாட்டுகளில் முதல் பத்து பெண் விளையாட்டளர்களில் ஒருவராக விளங்கியவர். இந்த சாதனையை இதற்கு முன்பும், இதற்கு பின்பும் வேறு எந்த இந்தியரும் இந்தப் பட்டியலில் இடம் பெறவில்லை என்று சொன்னால்  அது மிகையாகாது. சர்வதேச அரங்கில் தடகளப் போட்டிகளில் இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த இவரை “இந்திய தடகளங்களின் அரசி” எனவும், ‘இந்தியாவின் தங்க மங்கை’ எனவும், “பய்யொலி எக்ஸ்பிரஸ்” எனவும் வர்ணிக்கப்படுகிறார். தனது அதிவேக ஓட்டத்தின் மூலம் விளையாட்டுத் துறையில் தனக்கென தனி இடத்தைப் பிடித்து, இந்தியத் தடகள விளையாட்டுகளில் மாபெரும் சாதனையாளர்களில் ஒருவராக கருதப்படும் பி. டி. உஷா அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளை விரிவாகக் காண்போம். பிறப்பு: ஜூன் 27, 1964 இடம்: பய்யோலி (கோழிக்கோடு மாவட்டம்), கேரளா மாநிலம், இந்தியா பணி: தடகள விளையாட்டு விராங்கனை. நாட்டுரிமை: இந்தியன் பி. டி. உஷா என்று அனைவராலும் பிரபலமாக அறியப்படும் “பிலாவுள்ளகண்டி தெக்கெப்பரம்ப...

அன்னை தெரசா

படம்
அன்னை தெரசா  பிறந்தது: யூகோஸ்லோவியாவில் உள்ள ஸ்கோப்ஜி நகரம். பிறந்த தேதி: 26-08-1910 இயற்பெயர் : ஆக்னஸ் கோஞ்செ பொயாஜியூ (Agnes Gonxha Bojaxhin). செல்லப்பெயர் : கோன்ஸா தந்தையின் பெயர்:  நிகோலா பொயாஜியூ (Nikola Bojaxhin). தந்தையின் தொழில் பிரபலமான கட்டட ஒப்பந்தக்காரர் (யுகோஸ்லோவியாவின் ஸ்கோப்ஜி என்ற நகரின் மிக உயர்ந்த கட்டடங்கள் அவரது பெயரை அலங்கரித்துக் கொண்டு இருந்தன). தாயின் பெயர் திரானி பெர்னாய் (Drane Bernai) தாயின் தொழில் : வீடு, குடும்பம் மற்றும் கடவுள் இந்த மூன்றும் தான் இவரது உலகம். உடன் பிறந்தவர்கள் : அக்கா அகா (Aga) மற்றும் அண்ணன் லாஸர் (Lasar). ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாக தனது ஐந்து வயதிலேயே அனைத்து பாடங்களையும் நுனி நாக்கிலேயே வைத்திருப்பார். அவரது பாடல்கள் மற்றும் பாடங்களைப் பற்றிய பேச்சு ‘மடை திறந்த வெள்ளம் போல்’ காணப்படும். படிப்பு தவிர நகைச்சுவை உணர்வும் மிக அதிகமாக இருந்தது. இதனாலேயே எல்லோருடைய கவனத்தையும் எளிதில் வசீகரித்து விட்டார் ஆக்னஸ். ஆக்னஸின் சிறு வயதிலேயே தன் தந்தையை இழந...

ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள்.

படம்
ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள். 1. நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப் பட்டிருக்கிறேன். – மாவீரன் அலெக்ஸôண்டர் 2. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்; போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார். – கதே 3. வறட்டுப் பிடிவாதம் கொண்ட மனிதர்களுக்கு அவர்கள் அடையும் நஷ்டங்களே ஆசிரியர்கள். – ஷேக்ஸ்பியர் 4. தாயின் முகம்தான் குழந்தையின் முதல் பாடப் புத்தகம். – காந்தியடிகள் 5. கல்விக்கூடம் ஒரு தோட்டம்; மாணவர்கள் செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள். – ஜிக்ஜேக்ளர் 6. சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார். – வில்லியம் ஆல்பர்ட் 7. இயற்கைதான் மிகச் சிறந்த ஆசிரியர். – கார்லைல் 8. சிறந்த ஆசிரியருக்குக் கற்பனைத் திறன் உண்டு. அவர்கள் மாணவர்களைத் துல்லியமாக மதிப்பீடு செய்வார்கள். அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். புதிய சிந்தனைகளையும் வளர்ச்சிகளையும் பின்பற்றுவார்கள். – பெர்ஷியா ஆக்ஸ்டெட்

ஆசிரியர் தினம்

படம்
ஆசிரியர் தினம்  பிறப்பு: செப்டம்பர்  5, 1888 பிறப்பிடம்: சர்வபள்ளி கிராமம், திருத்தணி ,  தமிழ்நாடு ,  இந்தியா இறப்பு: ஏப்ரல்  17, 1975 தொழில்: அரசியல்வாதி ,  தத்துவவாதி ,  பேராசிரியர் நாட்டுரிமை: இந்தியா டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணனின் கல்விச் சிந்தனைகள் : • அந்தந்தப் பகுதிகளின் தாய் மொழியிலேயே பல்கலைக்கழகக் கல்வியை வழங்குவது தான் சிறந்தது. • ஆசிரியர்கள், தம்முடைய துறையில் நிகழும் அண்மைக்கால வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் அறிந்து கொண்டிருக்க வேண்டும். அறிவுத் தாகம் கொண்ட மாணவர்களை முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் திறன் படைத்தவர்களாகவும் விளங்க வேண்டும். • அனைவருக்கும் உயர்கல்வி அளிப்பது அரசின் கடமையாகும். • கல்வியானது மனிதனை நெறிமுறைப்படுத்துவதோடு சுதந்திரச் சிந்தனையாளனாக்க வேண்டும். • பல்கலைக் கழகங்கள், மனித நேயத்தையும் பொறையுடைமையையும், கருத்துப்புதுமையையும், உண்மைத் தேடலையும் நோக்கமாகக் கொண்டு கற்பிக்க வேண்டும். • ஆற்றல்மிகு எழுத்தாளர்கள் - அறிவியல் வல்லுநர்கள் - கவிஞர்கள் – கலைஞர்கள் – புதியன கண்டுபிடிப்ப...

காலம் மறந்த கணித மேதை

படம்
காலம் மறந்த கணித மேதை  " சுப்பையா சிவசங்கரநாராயண பிள்ளை , அல்லது,  எஸ். எஸ். பிள்ளை" இந்தியக் கணித மேதை உலகப் புகழ்பெற்ற இந்தியக் கணித மேதை எஸ்.எஸ்.பிள்ளை (S.S.Pillai) பிறந்த தினம்  (ஏப்ரல் 5).  * திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள வல்லம் கிராமத்தில் (1901) பிறந்தார். இவர் ஒருவயது குழந்தையாக இருந்தபோது தாய் காலமானார். இலத்தூரில் தொடக்கக் கல்வி கற்றார். அப்போது, தந்தையும் இறந்ததால் எதிர்காலம் கேள்விக்குறியானது. * சாஸ்திரியார் என்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஊக்கம் தந்ததோடு, தனது சொற்ப வருமானத்தில் இருந்து ஒரு பகுதியை இவரது கல்விக்காகவும் வழங்கினார். இதனால் உற்சாகத்துடன் படிப்பைத் தொடர்ந்த பிள்ளை, எம்எஸ்எம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்டியன் கல்லூரியில் இடைநிலைக் கல்வி கற்றார். * திருவனந்தபுரம் மஹாராஜா கல்லூரியில் கல்வி உதவித்தொகை பெற்று, பி.ஏ. வகுப்பில் சேர்ந்து பயின்றார். சென்னை பல்கலைக்கழகத்தில் கணிதத் துறையில் ஆராய்ச்சி மாணவராகச் சேர விரும்பினார். பி.ஏ. ஹானர்ஸில் முதல்வகுப்பில் தேறவில்லை என்பதால் இடம் கொடுக்க மறுத்தது...

கணக்கு... பாடம் அல்ல, வாழ்க்கை! கணித மேதை சகுந்தலா தேவி

படம்
கணக்கு... பாடம் அல்ல, வாழ்க்கை!                                     கணித மேதை சகுந்தலா தேவி  பிறப்பு: நவம்பர்  04, 1939 இடம்:  பெங்களூர், கர்நாடகா இறப்பு:  ஏப்ரல் 21 ,  2013 பணி: கணிதமேதை, ஜோதிடர் நாட்டுரிமை:  இந்தியா பாலினம்: பெண் சகுந்தலா தேவி எழுதிய நூல்கள்: தன்னுடைய கணிதத் திறமையின் மூலம் புகழ் பெற்ற சகுந்தலாதேவி அவர்கள், அனைவரும் ஏற்கும் வகையில் படித்து, பயன்பெற கணிதவியலைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார். ‘புக் நம்பர்ஸ்’, ‘பெர்ஃபெக்ட் மர்டர்’, ‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’, ‘இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ்’, ‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’ போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.      கணக்கு என்றாலே கசக்கும் பலருக்கு. பெருக்கலில் 16-ம் வாய்ப்பாடுக்கு மேல் படித்தவர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். இன்று தொழிலுக்கேற்ற கணித முறைகள் பல வந்துவிட்டன. ஆனாலும், அன்று தன் அளப்பரிய கணித ஆற்றலால் அதில் பல ஆக்கபூர்வ முயற்ச...

அப்துல்கலாமின் பொன்மொழிகள்

படம்
அப்துல்கலாமின் பொன்மொழிகள் 👍 **வெற்றி என்பது உன் நிழல் போல. நீ அதைத் தேடிப்போகவேண்டியதில்லை. நீ வெளிச்சத்தை நோக்கி நடக்கும்போது, அது உன்னுடன் வரும். 👍**உலகம் உன்னை அறிவதைவிட, உன்னை உலகிற்கு அறிமுகம் செய்துகொள். 👍 **முடியாது என்று நீ சொல்வதையெல்லாம் யாரோ ஒருவன், எங்கோ செய்து கொண்டிருக்கிறான். 👍 **ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும் உறைந்து கிடக்கும் அக்னிக் குஞ்சுகள் சிறகு முளைத்து பறக்கட்டும். இந்திய புண்ணியத் திருநாட்டின் புகழ் ஜூவாலை விண்ணிலும் பேரொளி வீசி பரவட்டும். 👍 **சிக்கல்களை எதிர்கொள்ளும் போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன. 👍 **கடவுள் நம்முடன் இருந்தால், நமக்கு எதிராக யார் இருக்க முடியும்? 👍 **நீங்கள் உறங்கும்போது வருவதல்ல கனவு. உங்களை உறங்கவிடாமல் செய்வதே கனவு. 👍**வானத்தைப் பாருங்கள். நாம் தனித்து இல்லை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நம்மிடம் நட்பாக உள்ளது. கனவு காண்பவர்களுக்கும், உழைப்பவர்களுக்கும் மட்டுமே அது சிறந்தவற்றை வழங்குகிறது. 👍 **வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதற்கு ஒரு வழி. அடுத்தவர்களின் வெற்றியை உங்களுடைய வெற்றியைப் போலக் கொண்டாட கற்...

புத்தரின் பொன்மொழிகள்

படம்
புத்தரின் பொன்மொழிகள் 1. உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும். 2. ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன். 3. நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும்  ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும். 4. அறிஞன் விழிப்படைந்து தன் வாழ்வில் கருத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழ்ந்து, வெள்ளத்தால் சேதம் அடையாத ஒரு தீவைப்போல தன்னைப் பலப்படுத்திக்கொள்கிறான். 5. ஒருவன் என்ன செயல் செய்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான். ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறான். ஆகவே, நம் செயல்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது. 6. ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும். வேறு ஒருவன் அவனுக்குத் தலைவனாக இருக்க முடியாது. தன்னைத் தானே அடக்கி கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற முடியும். 7.கையில் புண் இல்லையென்றால் ஒருவன் தன் கையில் நஞ்சையும் எடுக்கலாம். நஞ்சு அவனைப் பாதிப்பதில்லை. அதுபோல தீங்கு செய்யாத ஒருவனுக்குத் ...