டெங்கு காய்ச்சலுக்கு வீட்டிலேயே மருந்து தயாரிக்கலாம்

*டெங்குவை விரட்டும் மருந்து வீட்டிலேயே தயாரிக்கலாம்!*


Related image
நில வேம்பு
டெங்கு காய்ச்சல் பாதிப்பும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளன. மருத்துவமனைக்கு சென்றால், பெரும் செலவை இழுத்து விடக்கூடியதாக, டெங்கு காய்ச்சல் மாறி விட்டது. அப்படியே போனாலும், உடனடியாக நிவாரணம் கிடைக்குமா, காய்ச்சலும், அதனால் ஏற்படும் அசதியும் உடனே சரியாகுமா என்பதெல்லாம் சந்தேகமே.
ஆனால், வீட்டிலேயே தயார் செய்யக்கூடிய எளிய மருந்தான நில வேம்பு கஷாயத்தின் மூலம், டெங்கு காய்ச்சலில் இருந்து தப்பிக்க முடியும். நிலவேம்பு பொடி என்பது பலரும் நினைப்பது போல, ஒரே ஒரு மூலிகைச்செடியில் இருந்து தயார் செய்யப்படுவது அல்ல; அது, நில வேம்பு, வெட்டிவேர், விலாமிச்சை வேர், சந்தனம், பேய் புடல், பற் படாகம், சுக்கு, மிளகு, கோரைக்கிழங்கு ஆகியவை சேர்த்து தயார் செய்யப்பட்டது. சாதாரணமாக, அனைத்து மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.
நிலவேம்பு கசாயம் தயாரிக்கும் முறை: 5 கிராம் முதல் 10 கிராம் அளவு நிலவேம்பு பொடியை 200 மி.லி., தண்ணீரில் போட்டு 50 மி.லி., அளவுக்கு சுண்டும் வரை கொதிக்க வைக்க வேண்டும். அப்போதுதான் காய்ச்சலை குணப்படுத்துவதற்கான வேதிப்பொருட்கள் தண்ணீரில் கலந்து மருந்தாக மாறும். அதன்பின் கஷாயத்தை வடிகட்டி குடிக்க வேண்டும்.
எப்போது எப்படி குடிக்க வேண்டும்?
காய்ச்சல் உள்ளவர்கள் காலை, மதியம், இரவு என 3 வேளையும் குடிக்க வேண்டும். தயாரிக்கப்பட்ட கசாயத்தை 3 மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும், அதற்கு மேல் அதில் வீரியம் இருக்காது. சாப்பிடுவதற்கு 15 நிமிடத்துக்கு முன் நிலவேம்பு கஷாயத்தை குடிக்க வேண்டும். பெரியவர்கள் 30 மி.லி., முதல் 50 மி.லி., வரையும், 1 வயது முதல் 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 5 மி.லி., முதல் 10 மி.லி., வரையும் குடிக்க வேண்டும்.
கசாயம் கசப்பாக இருப்பதால், கசாயத்தை குடித்த பின்னர் தேன், பனைவெல்லம், ஆடாதோடை மணப்பாகு போன்றவற்றை கொடுக்கலாம், ஆனால் கசாயத்துடன் இவற்றை கலந்து கொடுக்கக்கூடாது.
நிலவேம்பு கசாயம் டெங்கு காய்ச்சலை குணப்படுத்துவதுடன் உடலில் ரத்த தட்டணுக்களையும், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது, சர்க்கரையின் அளவையும் கட்டுப்படுத்துகிறது.
கொசுக்கடியில் இருந்து நம்மை காக்கும் மிகச்சிறந்த கிருமிநாசினியாக தேங்காய் எண்ணெய் பயன்படுகிறது. டெங்கு கொசுக்களிடமிருந்து தப்பிக்க நாம் இரவில் தூங்குவதற்கு முன்பாக, தேங்காய் எண்ணெய்யை நமது முழங்காலில் இருந்து பாதம் வரை நன்றாக தடவிக் கொள்ள வேண்டும்.
நம்மை தாக்கும் டெங்கு கொசுக்களால் அதிக உயரமாக பறக்க முடியாது. அவை, முழங்காலுக்கு மேல் கடிக்காது. அதனால் அதற்கு ஏற்றது போல நாம் இரவில் ஆடைகளை அணிந்துக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு செய்தால், டெங்குக் காய்ச்சல் தொற்று நோய்களின் தாக்கம் ஏற்படாமல் எளிதில் தப்பிக்க முடியும்

கருத்துகள்

Veeramanikandan இவ்வாறு கூறியுள்ளார்…
iyarkaiye unmai theervu.....!!!!!!!!!!!!!!!!!!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

FORMULAS FOR SHAPES

BODMAS RULE

Set theory symbols