கணக்கு... பாடம் அல்ல, வாழ்க்கை! கணித மேதை சகுந்தலா தேவி
கணக்கு... பாடம் அல்ல, வாழ்க்கை! கணித மேதை சகுந்தலா தேவி
பிறப்பு: நவம்பர் 04, 1939
இடம்: பெங்களூர், கர்நாடகா
இறப்பு: ஏப்ரல் 21, 2013
பணி: கணிதமேதை, ஜோதிடர்
நாட்டுரிமை: இந்தியா
பாலினம்: பெண்
சகுந்தலா தேவி எழுதிய நூல்கள்:
தன்னுடைய கணிதத் திறமையின் மூலம் புகழ் பெற்ற சகுந்தலாதேவி அவர்கள், அனைவரும் ஏற்கும் வகையில் படித்து, பயன்பெற கணிதவியலைப் பற்றி பல நூல்களை எழுதியுள்ளார்.
- ‘புக் நம்பர்ஸ்’,
- ‘பெர்ஃபெக்ட் மர்டர்’,
- ‘ஃபிங்கரிங்: தி ஜாய் ஆஃப் நம்பர்ஸ்’,
- ‘இன் தி வொண்டேர்லாண்ட் ஆஃப் நம்பர்ஸ்’,
- ‘அஸ்ட்ராலஜி ஃபார் யூ’
போன்றவை இவருடைய புகழ்பெற்ற புத்தகங்கள் ஆகும்.
கணக்கு என்றாலே கசக்கும் பலருக்கு. பெருக்கலில் 16-ம் வாய்ப்பாடுக்கு மேல் படித்தவர்கள் அதிகம் இருக்க மாட்டார்கள். இன்று தொழிலுக்கேற்ற கணித முறைகள் பல வந்துவிட்டன. ஆனாலும், அன்று தன் அளப்பரிய கணித ஆற்றலால் அதில் பல ஆக்கபூர்வ முயற்சிகள் செய்தவர், கணித மேதை சகுந்தலா தேவி.
1939-ம் ஆண்டு நவம்பர் மாதம் 4-ம் தேதி, கர்நாடகா மாநிலத்திலுள்ள பெங்களூருவில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் சகுந்தலா. இவருடைய தந்தை ஒரு சர்க்கஸில் வேலைபார்த்து வந்தார். சுவாரஸ்யமான வித்தைகளை ரசிகர்கள் முன் செய்துகாட்டி அனைவரையும் சந்தோஷப்படுத்தி வந்தவருக்கு, தன் வீட்டிலேயே ஒரு மகிழ்ச்சி காத்திருந்தது.
சர்க்கஸில் காட்டிய வித்தைகளில் ஒன்றான சீட்டுக் கட்டு வித்தையை தன் மகள் சகுந்தலாவிடம் அவர் அப்பா விளையாட்டுக்குச் செய்துகாட்ட, அதைக் கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்த மூன்று வயது சகுந்தலா, ஒருநாள், 'நானும் கொஞ்சம் சீட்டில் வித்தை காட்டட்டுமா?' என்று கேட்டு, தந்தையை ஆச்சர்யத்தில் மூழ்கடித்தார். 'இனிமேல் நாம் சர்க்கஸ் வேலைக்குப் போக வேண்டியதில்லை. இந்த சீட்டு வித்தை போதும்' எனத் தன் மகள் சகுந்தலாவுடன் ஊர் ஊராகச் சுற்ற ஆரம்பித்தார் அவர்.
வித்தை மூலம் வருமானம் வந்ததோடு, சகுந்தலாவின் திறமையும் வெளிப்பட்டது. தன் ஆறு வயதில் கணக்கு மற்றும் நினைவாற்றல் திறமைகளை மைசூர் பல்கலைக்கழகத்திலும், எட்டு வயதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் வெளிப்படுத்தி, அனைவரையும் தன்னைத் திரும்பிப் பார்க்கச் செய்தார்.
கணிதப் புதிர்களுக்கு கம்ப்யூட்டர், கால்குலேட்டர் இயந்திரங்களின் வேகத்தை முந்தி விடையளிக்கும் திறமை பெற்றிருந்தவர் சகுந்தலா. தன் கணிதத் திறமையை உலகறியச் செய்ய, அவர் பல நாடுகளுக்குச் சென்று வந்தார். 1977-ம் ஆண்டு 201-க்கு ‘23’கனமூலத்தை மனதில் நினைத்தே கூறினார். லண்டனில் உள்ள இம்பீரியல் கல்லூரியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், இரண்டு 13 இலக்க எண்களைப் (7,868, 369,774,870 * 2,465,099,745,779 = 18.947.668.177.995.426.462.773.730) பெருக்கி, 28 விநாடிகளில் விடை கூறி, உலகையே வியக்கவைத்தார். இந்த விடை, 26 இலக்கங்கள் கொண்டது. இதுவே அவரது உலக சாதனையானது.
அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் இருந்து அழைப்பு வந்தபோது, சகுந்தலாவின் வயது 46. மூளை அதே வேகத்தில் வேலை செய்யுமா தெரியவில்லை. சோதித்துப்பார்த்துவிடலாம் எனக் களம் இறங்கினர். அவர்கள் கொடுத்த
91674867692003915809866092758538016248310668014430862240712651642793465704086709659 3279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305 620821016129132845564805780158806771 என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்க மூலத்தைக் கேட்டார்கள். கம்ப்யூட்டர், 13,000 கட்டளைகளுக்குப் பின் ஒரு நிமிடத்தில் பதில் சொல்லத் தயாரானபோது, சகுந்தலா, 546372891 என 10 நொடிகள் முன்னதாகவே சொல்லிவிட்டார்.
91674867692003915809866092758538016248310668014430862240712651642793465704086709659 3279205767480806790022783016354924852380335745316935111903596577547340075681688305 620821016129132845564805780158806771 என்கிற இந்த 201 இலக்க எண்ணின் 23-வது வர்க்க மூலத்தைக் கேட்டார்கள். கம்ப்யூட்டர், 13,000 கட்டளைகளுக்குப் பின் ஒரு நிமிடத்தில் பதில் சொல்லத் தயாரானபோது, சகுந்தலா, 546372891 என 10 நொடிகள் முன்னதாகவே சொல்லிவிட்டார்.
ஐன்ஸ்டீன் மூன்று மணி நேரம் செலவழித்துக் கண்டுபிடித்த ஒரு கணக்கின் விடையை, மிகச் சில நொடிகளிலேயே தீர்த்த சகுந்தலாவின் சாதனை, வரலாற்றில் உள்ளது.
கணிதத்தில் மட்டுமல்லாமல் ஜோதிடக் கலையிலும் வல்லவராக இருந்தார் சகுந்தலா.
உடல் நலக் குறைவினால், 2013 ஏப்ரல் 3-ம் தேதி காலமானார் சகுந்தலா தேவி. இந்தியாவின் இந்த பெண் கணித மேதை, மறக்கமுடியாத ஆளுமை.
"மனித கம்ப்யூட்டர்" என்று அழைக்கப்படும் கணித மேதை சகுந்தலா தேவி
கருத்துகள்