புத்தரின் பொன்மொழிகள்

புத்தரின் பொன்மொழிகள்



1. உலக வாழ்க்கையின் நோக்கம் பிறருக்கு உதவி செய்வதே ஆகும்.

2. ஒன்றும் தெரியாது என்று நினைப்பவனுக்கு கொஞ்சமாவது அறிவு உண்டு. ஆனால், எல்லாம் தெரியும் என்று நினைப்பவன் முழு மூடன்.

3. நம் எண்ணங்கள் யாவும், பிறருக்கு எந்த வகையிலும் துன்பம் தருவதாக இருக்கக்கூடாது. பிறருக்கு நன்மையையும்  ஆறுதலையும் தரக்கூடியதாக இருக்கவேண்டும்.

4. அறிஞன் விழிப்படைந்து தன் வாழ்வில் கருத்துடனும் ஒழுக்கத்துடனும் வாழ்ந்து, வெள்ளத்தால் சேதம் அடையாத ஒரு தீவைப்போல தன்னைப் பலப்படுத்திக்கொள்கிறான்.

5. ஒருவன் என்ன செயல் செய்கிறானோ, அதுவாகவே அவன் ஆகிவிடுகிறான். ஆதலால், ஒவ்வொருவனும் தன்னைத்தானே உருவாக்கிக்கொள்கிறான். ஆகவே, நம் செயல்களிலிருந்து நாம் தப்பிக்க முடியாது.

6. ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும். வேறு ஒருவன் அவனுக்குத் தலைவனாக இருக்க முடியாது. தன்னைத் தானே அடக்கி கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற முடியும்.

7.கையில் புண் இல்லையென்றால் ஒருவன் தன் கையில் நஞ்சையும் எடுக்கலாம். நஞ்சு அவனைப் பாதிப்பதில்லை. அதுபோல தீங்கு செய்யாத ஒருவனுக்குத் தீங்கு நேர்வதில்லை.

8. ஆகாயத்திற்குச் சென்றாலும், நடுக் கடலுக்குச் சென்றாலும், மலையின் இடுக்கில் மறைந்துகொண்டாலும், எங்கு சென்று ஒளிந்துகொண்டாலும், தீய செயலைச் செய்தவர் அதன் விளைவுக்குத் தப்பவே முடியாது.

9. எந்தச் செயலையும் நன்கு ஆராய்ந்து, எது நன்மைக்கு உகந்தது என்று காண்கிறீர்களோ, அதையே நம்பி உறுதியாகப் பற்றுங்கள்.

10. பகையைத் தீர்ப்பது நட்பு ஒன்றுதான். அமைதிக்கான உறுதியும் அதுவே

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழநி மலை முருகன்

சங்குப் பூ

Types of triangle