காலை உணவு...மிகவும் அவசியம்!

காலை உணவு...மிகவும் அவசியம்!

Related image

காலை உணவு அன்றைய தினத்தின் மிக முக்கியமான உணவு. மற்ற உணவு வேளைகளைக் காட்டிலும் உடல் ஆரோக்கியத்தைத் தருவதிலும் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது.
அதி அவசரங்களில் மூழ்கி பரபரப்பாகக் கிளம்பி ஓடுவது இன்றைக்கு சகஜமாகி விட்டது. கடிகாரம் விரட்டும் இந்த விளையாட்டில் காலை உணவு என்பதைப் பலரும் மறந்து விடுகிறார்கள். ஆனால், காலை உணவு கட்டாயம் என்று மருத்துவம் கடுமையாக எச்சரிக்கிறது. இரவு உணவுக்கும், காலை உணவுக்கும் இடையே நீண்ட இடைவெளி இருப்பதால்தான் காலை உணவை பிரேக் ஃபாஸ்ட் அதாவது விரதத்தை உடைப்பது என்றே பெயரிட்டுச் சொல்கிறோம். காலை உணவு சாப்பிடுபவர்கள் மட்டுமே நாள் முழுதும் வேகமாக செயல்படுவதோடு மனஅழுத்தம் இன்றி மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்கள் என்று ஆய்வுகள் சொல்கிறது.
காலை உணவு சிறப்பான உணவாக இருப்பது நல்லது. வளரும் குழந்தைகள் உள்ள வீட்டில் தினையரிசிப் பொங்கல் செய்வது நல்லது. உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்களுக்கு, வரகரிசி உப்புமா சிறந்த மினி டிபன். இவையெல்லாம் சாதாரணமாக பொங்கல், உப்புமா செய்யத் தெரிந்தவர்கள் எளிதாகச் செய்யக்கூடிய சிற்றுண்டிகள். அரிசிக்குப் பதில் தினை. ரவைக்குப் பதில் வரகரிசி… அவ்வளவுதான்
Image result for காலை உணவு...மிகவும் அவசியம்!

கருத்துகள்

Veeramanikandan இவ்வாறு கூறியுள்ளார்…
neenga sonna break_fast concept super

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

FORMULAS FOR SHAPES

BODMAS RULE

Set theory symbols