அருகம்புல்

இயற்கை மருத்துவத்தில் அருகம்புல்லின் பயன்களை 

Related image

தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருகம்புல் சாறு குடிக்க வேண்டும். உடல் வெப்பத்தை அகற்றும், சிறுநீர் பெருக்கும், குடல் புண்களை ஆற்றும், இரத்தை தூய்மையாக்கும், உடலை பலப்படுத்தும், கண் பார்வை தெளிவுபெறும். தினமும் அருகம்புல் குடிப்பது நல்லது என்கிறது இயற்கை மருத்துவம்.

@ கணு நீக்கிய அருகம்புல் 30 கிராம் வென்ணெய் போல் அரைத்துச் சம அளவு வெண்ணெய் கலந்து 20 முதல் 40 நாட்கள் வரை  சாப்பிட உடல் தளர்ச்சி நீங்கி உறுதிப்படும்.

@ சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் சாறை காலை எழுந்தவுடன் குடித்து வந்தால் உடலிலுள்ள கெட்ட நீர் வெளியேறி  தேவையற்ற சதைப்பகுதி குறைந்து விடுமாம். ரத்தத்தை சுத்தப்படுத்தும் சக்தியும் அருகம்புல்லுக்கு உண்டாம்.

@ ஞாபக சக்தியைத் தூண்ட அருகம்புல் சிறந்த மருந்தாகும். ஞாபக மறதியைப் போக்கி அன்றாட வாழ்வில் மன உளைச்சல், மன இறுக்கம் நீங்கும். அருகம்புல்லை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து குடித்து வந்தால் நினைவாற்றல்  அதிகரிக்கும்.

@ அருகம்புல்லையும், தேங்காய் எண்ணையையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதை உடலில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவிடவும். பிறகு கடலை மாவால் தேய்த்துக் குளித்தால் உடல் கண்ணாடி போல் ஜொலிக்கும்.

@இரத்த சோகை நீங்கி, இரத்தம் அதிகரிக்கும். வயிற்றுப் புண் குணமாகும். இரத்த அழுத்தம் குணமாகும். நீரிழிவு  நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும்.

@மலச்சிக்கல் நீங்கும். புற்று நோய்க்கு நல்ல மருந்து. உடல் இளைக்க உதவும். இரவில் நல்ல தூக்கம் வரும். பல், ஈறு  கோளாறுகள் நீங்கும்.

@வாயுத் தொல்லை உள்ளவர்கள் அருகம்புல் சாறு அருந்தி வர, அதிலிருந்து விடுபடலாம். உடல் சூட்டை இது தணிக்கிறது. அருகம்புல் சாற்றை கொஞ்சம் கொஞ்சமாக சுவைத்துக் குடிக்க வேண்டும். குடித்த 2 மணி நேரத்திற்குப் பிறகு மற்ற உணவு  வகைகள் சாப்பிடலாம்.

கருத்துகள்

Veeramanikandan இவ்வாறு கூறியுள்ளார்…
அருமை

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழநி மலை முருகன்

சங்குப் பூ

Types of triangle