ஒற்றைத்தலைவலி

நீங்கள் தீராத ஒற்றைத்தலைவலியால் கஷ்டப்படுகிறீர்களா? 


ஒற்றைத்தலைவலி நம்மை மிகுந்த சிரமத்திற்குள்ளாக்கும் நோய்களில் ஒன்றாகும்.

இதிலிருந்து மீண்டு வர பொதுவாக நாட்டு மருத்துவமே கை கொடுக்கும்.

அந்த வகையில் நீங்கள் வீட்டிலேயே செய்து பயன்பெறக்கூடிய சில நாட்டு மருத்துவ குறிப்புகள் பற்றி

எலுமிச்சை :

எலுமிச்சை தோலை நன்கு காய வைத்து அரைத்து நெற்றியில் பற்று போடுவது நல்ல பலனை தரும்.

திராட்சை

நன்கு கனிந்த திராட்சைகளை நன்கு அரைத்து தண்ணீர் சேர்க்காமல் அருந்த வேண்டும்.

முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் இலைகளை நன்கு நசுக்கி ஒரு சுத்தமான துணியில் கட்டி தலையின் மீது ஒத்தடம் தரலாம். கோஸ் உலர்ந்து விட்டால் புதிதாக இலைகளை நசுக்கி துணியில் கட்டவும்.

கடுகு

அரைத்தேக்கரண்டி கடுகுப் பொடியை முன்று தேக்கரண்டி தண்ணீரில் கலந்து இந்த கரைசலை மூக்கில் விட ஒற்றை தலைவலி தீரும்.

பாதாம்

10 அல்லது 12 பாதாம் பருப்புகளை தலைவலியின் போது சாப்பிடலாம்.இது நல்ல நிவாரணம் தரக்கூடியதாகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

TRIGONOMETRIC RATIOS OF COMPOUND ANGLES

Set theory symbols

அப்துல்கலாமின் பொன்மொழிகள்