வெற்றிலை

அறிவோம் வெற்றிலையின் குணங்கள்!



* வெற்றிலையுடன் மிளகை அரைத்து பாக்கு அளவு உட்கொண்டு, பின் வெந்நீர் அருந்தினால் எல்லா விஷங்களும் முறியும்.
* உடலில் அதிக வெப்பத்தையும், வலியையும் நீக்கும் குணம் வெற்றிலைக்கு உண்டு.
* வெற்றிலையுடன் சிறிது உப்பை மடித்துச் சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் குத்து வலி நீங்கி விடும்.
* வெற்றிலைச் சாறும் தேனும் தலா ஒரு தேக்கரண்டி எடுத்து தினமும் இரு வேளை அருந்திவர உடல் பலவீனமும், நரம்புத்தளர்ச்சியும் நீங்கும்.
* வெற்றிலையுடன் சம அளவு ஓமம் சேர்த்து இடித்து பிழிந்து அச்சாற்றை தேன் கலந்து பருகி வந்தால் வயிற்றுப்பொருமலுடன் கூடிய வயிற்றுப் போக்கு நிற்கும்.
* கடுமையான தலைவலி இருந்தால் வெற்றிலையை அரைத்து பத்துப் போட்டால் தலைவலி நீங்கிவிடும்.
* வெற்றிலையை சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்து கட்ட குழந்தை பெற்ற தாய்க்கு அதிகமாக பால் சுரக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழநி மலை முருகன்

Types of triangle

சங்குப் பூ