முதுகுவலிக்கு எளிய உடற்பயிற்சிகள்

முதுகுவலிக்கு எளிய உடற்பயிற்சிகள்


 முதுகு வலியால் அவதிப்படுபவர்கள் இந்த எளிய பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக நிவாரணம் அடைவதை காணலாம்.

முதலில் விரிப்பில் அமர்ந்து கால்களை முன்புறமாக நீட்டிக்கொள்ள வேண்டும்.

 சுவாசத்தை இயல்பான நிலையில் வைத்து முன்னால் குனிந்து உங்கள் கைகளால் கால்களின் கணுக்காலை தொட வேண்டும்.

அவ்வாறு குனியும் போது கால் முட்டுகள் வளைய கூடாது.

 இந்த நிலையில் 10 முதல் 20 வினாடிகள் இருக்க வேண்டும்.

5 வினாடிகள் ஒய்வு எடுத்த பின்னர் மறுமுறை செய்யவும்.

 பின்னர் படத்தில் உள்ளது போல் முட்டியை வளைத்து வைத்து கொண்டு கால் கணுக்கால்களை தொட வேண்டும்.

இவ்வாறு தொடர்ந்து செய்வதால் முதுகெலும்பு, தோள்கள் நன்கு வலிமை பெறுகிறது.

 மேலும் செரிமானத்தை தூண்டுகிறது.

 உங்கள் கால்விரல்கள் தொடும் முயற்சியில் ஈடுபடும் போது முதுகுத்தண்டில் அதிக வலி இருந்தால் இந்த பயிற்சியை செய்ய கூடாது.

 மேலும் இந்த பயிற்சியை செய்யும் போது முதுகிற்கு அதிக அழுத்தம் கொடுக்க கூடாது.

கருத்துகள்

Veeramanikandan இவ்வாறு கூறியுள்ளார்…
சிறந்த நோக்கு செய்தி.....

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பழநி மலை முருகன்

Types of triangle

சங்குப் பூ