நாட்டு வெல்லப்பாகு
*நாட்டு வெல்லப்பாகுவில் இருக்கும் எண்ணில் அடங்கா சக்திகள் இதோ…* நாட்டுச்சர்க்கரை, பனைவெல்லம், அச்சுவெல்லம், கருப்பட்டி போன்ற நம் பாரம்பர்ய இனிப்புச் சுவையூட்டிகளில் சத்துகளும் மருத்துவக் குணங்களும் “வெல்லத்தின் முழுமையான பலன்கள் கிடைக்க வேண்டும் என்றால், வெல்லப்பாகு நிலைதான் மிகச் சிறந்தது. செயற்கையான வேதிப்பொருள்கள் சேர்க்கப்படாத நிலையில் இருக்கும் வெல்லப்பாகில் கூடுதல் மருத்துவப் பயன்கள் கிடைக்கும். சத்துகள் கால்சியம், மக்னீசியம், மாங்கனீஸ், பொட்டாசியம், தாமிரம், இருப்புச்சத்து, பாஸ்பரஸ், குரோமியம், கோபால்ட் மற்றும் சோடியம் போன்ற உடலுக்குத் தேவையான அத்தியாவசிய தாதுச் சத்துக்கள் உள்ளன. மேலும், வைட்டமின் பி 3, நியாசின் (Niacin), வைட்டமின் பி 6, தயாமின், ரிபோஃப்ளேவின் ஆகியவையும் உள்ளன. இதில் அதிக அளவில் கார்போஹைட்ரேட்டும், குறைந்தளவு கொழுப்புச்சத்து மற்றும் நார்ச்சத்தும் உள்ளன. செரிமானம் சீராகும் உமிழ்நீரைப் பெருக்கி, சாப்பிட்ட உணவு எளிதில் செரிமானமாக உதவும். இது, உணவுக்குழாய், வயிறு என உடல் உறுப்புகளையும் சுத்திகரிக்கும் ஆற்றல் கொண்டது. மலச்சிக்கல் போக்கும் இதில் உள்ள ஆன்ட...