சங்குப் பூ
சங்குப் பூ
உணவிலும் மாற்றம்!!!
உடலிலும் மாற்றம்!!!!
சங்குப் பூ:
சங்குப்பூ வேரை (50 கிராம்) நசுக்கி அரை லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி மூன்று தேக்கரண்டி வீதம் 2 மணிநேரத்திற்கு ஒரு முறை 6 முறைகள் ஒரே நாளில் சாப்பிட்டு வந்தால் எல்லாவிதமான காய்ச்சலும் குணமாகும்.
சங்குப்பூ வேர், கீழா நெல்லி முழுத் தாவரம், யானை நெருஞ்சில் இலை, அருகம்புல், இவை ஒவ்வொன்றும் ஒரு கைப்பிடியுடன் மிளகு (5) சேர்த்து அரைத்து நெல்லிக்காய் அளவுக்கு தயிரில் கலக்கி காலை வேளை 10 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால்வெள்ளை படுதல், சிறுநீர் எரிச்சல் குணமாகும்.
சங்குப்பூக்களை பறித்து தண்ணீரில் 24 மணி நேரம் ஊறவைத்து அந்த தண்ணீரை குடித்து வந்தால் ரத்தக்குழாயில் உள்ள அடைப்புநீங்கும்.
சங்குப்பூக்களை நீரில் கொதிக்க வைத்து, அந்த கொதிநீரால் பொறுக்கும் சூட்டில் புண்களைக் கழுவி வந்தால் பால்வினை நோய், வெள்ளை படுதல் உள்ளவர்களுக்கு யோனியில் ஏற்படும் துர்நாற்றமும் ஆகியவை கட்டுப்படும்.
சங்குப் பூ செடியின் காய்களுக்குள் இருக்கும் முற்றிய விதைகளை எடுத்து வறுத்து பொடியாக்கி அரை ஸ்பூன் அளவுக்குஎடுக்கவும். இதனுடன் கால் ஸ்பூன் சுக்குப்பொடி, சிறிது இந்துப்பு சேர்த்து ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதைவடிகட்டி தினமும் காலையில் குடித்துவந்தால் காலில் ஏற்படும் வீக்கம் குறையும்.
சங்கு பூ செடியின் இலை சாறு ஒரு ஸ்பூன், தேன் , இஞ்சி சாறு (5 மில்லி) இதனுடன் சேர்த்து காலை, மாலை என இருவேளையும் குடித்து வந்தால் உள்ளங்கை, காலில் ஏற்படும் அதிகப்படியானவியர்வை கட்டுப்படும். காய்ச்சல் குணமாகும் .காக்காய் வலிப்பு வராமல் தடுக்கிறது
கருத்துகள்