இந்திய தேசியக் கொடி


இந்திய தேசியக் கொடி :



அளவு
3:2
ஏற்கப்பட்டது
22 ஜூலை 1947                                        
வடிவம்
மேலிருந்து கீழாக, காவி, வெள்ளை, பச்சை ஆகிய மூன்று வண்ணங்களும், நடுவில் கடற்படை நீல வண்ண நிறத்தில்    உள்ளது.
அசோகச் சக்கரமும்
வடிவமைப்பாளர்
பிங்கலி வெங்கைய்யா

கொடியின் அம்ச பொருள் விளக்கம்:

    காவி நிறம் இந்துத்துவத்தையும், பச்சை நிறம் இஸ்லாமியத்தையும், வெள்ளை நிறம் ஏனைய பிற சமயங்களைக் குறிக்கும் வகையில் அமைந்தன.

*    'காவி' : தைரியத்தையும், தியாகத்தையும் குறிக்கும்
*    'வெள்ளை' : அமைதி, உண்மை, தூய்மை*    'பச்சை' : செம்மை, நம்பிக்கை, வீர தீரத்தைக் குறிக்கின்றன.*    அசோகச் சக்கரம் : நீதியைக் குறிக்கும்.


கொடி தயாரிப்பு முறை:

     கொடித்துணி, [காதி] என்கிற கைத்தறித் துணியில் மட்டுமே இருக்கவேண்டும். பருத்தி, பட்டு மற்றும் ஆட்டு உரோமம்(உல்லன்)இவற்றில் ஒன்றால் நெய்யப்பட்ட கைத்தறித்துணியாகத்தான் இருக்கவேண்டும். கொடியின் முக்கிய மூவர்ண பாகம் காதி-பண்டிங் என்கிற நெசவாலும், பழுப்பு நிற கம்பத்தில் இணைக்கும் பாகம் காதி-டக் என்கிற நெசவு, ஆகிய இரு வகை கைத்தறித்துணியால் உருவாக்கப்படுகிறது.
     காதி என்பது சாதாரண துணி போல் இரன்டு இழைகள் கொண்டு நெய்யப்படாமல் மூன்று இழைகளால் நெய்யப்படுகிறது. இந்த வகை நெய்தல் மிகவும் அரிதான ஒன்றாகும் இந்தியாவில் பன்னிரெண்டுக்கும் குறைவான நெசவாளர்களே இதை செய்கின்றனர்.

கொடியின் அளவு(milli metre):

       6300-4200, 3600-2400, 2700-1800, 1350-900, 900-600, 450-300, 225-150, 150-100

தேசிய  அடையாளங்கள்:


          இந்தியாவின் தேசியச் சின்னம் அசோகச் சிங்க கற்தூண். 1950-ம் ஆண்டு ஜனவரி 26-ந் தேதி அங்கீகரிக்கப்பட்டது.


           இந்திய தேசியக் கொடி பிங்கலி வெங்கையா வடிவமைத்த மூவர்ண கொடி. 1947-ம் ஆண்டு ஜூலை 22-ந் தேதி இது அங்கீகரிக்கப்பட்டது.


           நாட்டின் தேசிய கீதம் 'ஜன கண மன...' 1950-ம் ஆண்டு ஜனவரி 24-ந் தேதி அங்கீகரிக்கப்பட்டது.


     சுதந்திர போராட்டத்தில் உத்வேகம் அளித்த தேசியப் பாடல் 'வந்தே மாதரம்'

           இந்தி, தமிழ், மலையாளம், வங்காளி, அசாமி, தெலுங்கு, மராத்தி, ஒரியா, பஞ்சாபி, சமஸ்கிருதம், சிந்தி, குஜராத்தி, காஷ்மீரி, உருது, கன்னடம்கொங்கணி, மணிப்புரி, நேப்பாளி, தோஹ்ரி, போடோ, சந்தாலி, மைதிலி ஆகியவை அங்கீகரிக்கப்பட்ட 22 தேசிய மொழிகளாகும்.

           இந்தியாவின் தேசிய விலங்கு புலி. 1972-ம் ஆண்டு இது அறிவிக்கப்பட்டது

           1963-ம் ஆண்டு தேசிய பறவையாக மயில் அறிவிக்கப்பட்டது.

          இந்தியாவின் மிக நீளமான நதியான கங்கையே தேசிய நதியாக 2008-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.


           தேசிய விளையாட்டாக அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டு ஆக்கி.

விதிமுறைகள்:

     தனியார் நிறுவனங்கள்தனிமனிதர்கள் பயன்படுத்த தடை இல்லை. அதற்குரிய மரியாதை கொடுப்பதே அவசியம்.

     பொது இடத்தில தேசிய  கொடியைகிழித்தல்எரித்தல்போன்றவை தண்டனைக்குரியவை.

     எந்த பொருளையும் மூடிவைக்க தேசிய  கொடியை அலங்கார பொருளாய்  பயன் படுத்த கூடாது.

     தேசிய  கொடியை சட்டையாகவோகைகுட்டையாகவோ பயன்படுத்துதல் கூடாது.

     சூரிய உதயத்துக்கு பிறகு தான்  கொடி  ஏற்ற பட வேண்டும்அதேபோல் மறைவதற்கு முன்பே இறக்கிவிட வேண்டும்.

     அரசு விருந்தினராக வெளிநாட்டு தலைவர்கள் பயணிக்கும் கார்களில் வலது புறம் நம் தேசிய கொடியும் இடது புறம் அந்நாட்டு தேசிய கொடியும் இடம் பெற  வேண்டும் .

     பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் கூட்டங்களில் நம் தேசிய  கொடி  முதலாவதாக ஏற்றப்பட்டு இறுதியாக இறக்க படவேண்டும். பிற நாட்டு கொடிகள் அந்நாட்டு ஆங்கில பெயரின் அகர வரசையில் ஏற்றபடவும் இறக்கபடவும் வேண்டும்.

     பிரதமர்ஜனாதிபதிதுணை ஜனாதிபதி ஆகியோரின் மறைவின் போது  நாடெங்கிலும்சபாநாயகர் ,சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகியோர் இறந்தால் தில்லி மற்றும் அவர் சார்ந்த மாநிலத்திலும்முதல்வர்கள்மாநில அமைச்சர்கள் மறைந்தால் அந்தந்த  மாநிலத்திலும்  தேசிய  கொடி  அரை கம்பத்தில் பறக்க விடப்படும்.

     அரைக்கம்பத்தில் உள்ள தேசிய  கொடியை இறக்கும்போது,  முழு கம்பத்திலும் ஏற்றிய பிறகே இறக்க வேண்டும் .





கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

TRIGONOMETRIC RATIOS OF COMPOUND ANGLES

Set theory symbols

அப்துல்கலாமின் பொன்மொழிகள்