ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள்.
ஆசிரியர் பற்றிய பொன்மொழிகள். 1. நான் உயிரோடு இருப்பதற்கு, என் தந்தைக்குக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், சிறப்பாக வாழ்வதற்கு என் ஆசிரியருக்குக் கடமைப் பட்டிருக்கிறேன். – மாவீரன் அலெக்ஸôண்டர் 2. யாரிடம் கற்கிறோமோ அவரே ஆசிரியர்; போதிப்பவர் எல்லாம் ஆசிரியர் ஆகார். – கதே 3. வறட்டுப் பிடிவாதம் கொண்ட மனிதர்களுக்கு அவர்கள் அடையும் நஷ்டங்களே ஆசிரியர்கள். – ஷேக்ஸ்பியர் 4. தாயின் முகம்தான் குழந்தையின் முதல் பாடப் புத்தகம். – காந்தியடிகள் 5. கல்விக்கூடம் ஒரு தோட்டம்; மாணவர்கள் செடிகள்; ஆசிரியர்கள் தோட்டக்காரர்கள். – ஜிக்ஜேக்ளர் 6. சராசரி ஆசிரியர் பாடத்தை நடத்துகிறார். சிறந்த ஆசிரியர் நடைமுறை உதாரணங்களோடு கற்பிக்கிறார். உன்னதமான ஆசிரியர் உயிரோட்டத்தை ஏற்படுத்துகிறார். – வில்லியம் ஆல்பர்ட் 7. இயற்கைதான் மிகச் சிறந்த ஆசிரியர். – கார்லைல் 8. சிறந்த ஆசிரியருக்குக் கற்பனைத் திறன் உண்டு. அவர்கள் மாணவர்களைத் துல்லியமாக மதிப்பீடு செய்வார்கள். அவர்களுக்கு நகைச்சுவை உணர்வு அதிகம். புதிய சிந்தனைகளையும் வளர்ச்சிகளையும் பின்பற்றுவார்கள். – பெர்ஷியா ஆக்ஸ்டெட்

கருத்துகள்